sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2024 ஜூலை - ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

/

2024 ஜூலை - ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

2024 ஜூலை - ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்

2024 ஜூலை - ஆகஸ்டில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2025

Google News

PUBLISHED ON : ஜன 01, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஜூலை3: தி.மு.க., மேயர்கள் கல்பனா(கோவை), சரவணன் (திருநெல்வேலி) ராஜினாமா.

ஜூலை13: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி.

ஜூலை15: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்.

ஜூலை27: புதுச்சேரி துணைநிலை கவர்னராக குனியல் கைலாசநாதன் நியமனம்.

ஆக.9: அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவருக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் 'தமிழ் புதல்வன்' திட்டம் துவக்கம்.

ஆக.17: தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களுக்காக, 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் காஞ்சிபுரத்தில் திறப்பு.

ஆக.18: பவானி ஆற்றின் உபரி நீரை கோவை, திருப்பூர், ஈரோடு விவசாயத்துக்கு பயன்படுத்த அத்திக்கடவு - அவினாசி திட்டம் துவக்கம்.

*கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

ஆக.19: தலைமை செயலராக முருகானந்தம் பதவியேற்பு.

ஆக.31: சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு வழித்தடத்தில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்.

இந்தியா

ஜூலை1: புதிய மூன்று குற்றவியல் சட்டம் அமல்.

ஜூலை3: சக்தி வாய்ந்த 'செபெக்ஸ்' வெடிகுண்டை இந்திய கப்பல் படை உருவாக்கியது.

*தேசிய மருத்துவ ஆணைய தலைவராக கங்காதர் பதவியேற்பு.

*தெற்காசியாவின் பெரிய பைலட் பயிற்சி பள்ளியை ஆந்திராவின் அமராவதியில் ஏர் இந்தியா அமைத்தது.

ஜூலை4: ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன் ராஜினாமா. அமலாக்கத் துறை வழக்கில் ஜாமினில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்

ஜூலை10: தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலோசகராக சவுமியா சுவாமிநாதன் நியமனம்.

ஜூலை14: பிரதமரின் 'எக்ஸ்' (டுவிட்டர்) கணக்கை பின்தொடர்பவர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது.

*ம.பி.,யின் இந்துாரில் 24 மணி நேரத்தில் 11 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை.

ஜூலை27: மஹாராஷ்டிரா கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்,

ஆக.8: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா 80, காலமானார்.

ஆக.9: இந்தியாவின் முதல் உணவு தானிய ஏ.டி.எம்., ஒடிசாவில் துவக்கம்.

ஆக.12: எந்த காலநிலையிலும் விளையும் 109 பயிர் ரகங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

ஆக.14: அமலாக்கத்துறை இயக்குநராக ராகுல் நவீன் பதவியேற்பு.

ஆக.17: 'அக்னி' ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படும் அகர்வால் 84, காலமானார்.

ஆக.27: மதுபான ஊழல் வழக்கில் பாரத் ராஷ்டிர சமிதியின் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின்.

ஆக.30: இந்தியாவின் பெரிய விமான நிலைய ஓய்வறை கொச்சியில் திறப்பு.

உலகம்

ஜூலை1: பனாமா அதிபராக ஜோஸ் ரவுல் முலினோ பதவியேற்பு.

ஜூலை2: நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூப் பதவியேற்பு.

ஜூலை3: ஜப்பானில் புதிய கரன்சி (யென்) அறிமுகம்.

ஜூலை6: ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசஸ்கியான் வெற்றி.

*51,200 ஆண்டு பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூலை8: மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடின் - பிரதமர் மோடி சந்திப்பு.

ஜூலை9: 41 ஆண்டுக்குப்பின் ஆஸ்திரியா சென்ற முதல் பிரதமரானார் மோடி.

ஜூலை15: நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு.

ஜூலை19 : முழுவதும் ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் பயணிகள் கப்பல் சேவை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் துவக்கம்.

ஜூலை20: வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு அறிவிப்பை எதிர்த்து போராட்டம்.

ஜூலை22: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் அறிவிப்பு.

ஜூலை24: ஐ.நா.,வின் உலக காடுகளின் பரப்பளவு பட்டியலில் சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா முதல் மூன்று இடத்தை பிடித்தன.

ஆக.5: வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் தீவிரம். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியா வந்தார்.

ஆக.6: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனிஸ் தேர்வு.

ஆக.17: இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து நுசந்தராவுக்கு மாற்றம்.

ஆக.18: தாய்லாந்து பிரதமராக பேட் டோங்டர்ன் ஷினவத்ரா பதவியேற்பு.

ஆக.22: உக்ரைன் சென்றார் பிரதமர் மோடி.

'தலை' தப்பியது

ஜூலை 14: அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிரசார கூட்டத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; வலது காதில் காயத்துடன் தப்பினார்.

பெரிய 'சல்யூட்'

ஆக.18: லடாக்கில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பாராசூட் வாயிலாக தற்காலிக மருத்துவமனையை தரையிறக்கி ராணுவம் சாதனை.

'ஸ்டார்' ஸ்டார்மர்

ஜூலை 5: பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி. பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்றார்.

கொந்தளித்த கோல்கட்டா

ஆக.10: கோல்கட்டா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொலை. நாடு முழுவதும் போராட்டம்.

ஆன்மிக சோகம்

ஜூலை 2: உ.பி.,யின் ஹத்ராசில் ஆன்மிக நிகழ்ச்சியில் நெரிசல். 121 பேர் பலி.

டாப் - 3

ஆக.12: திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகள் துவக்கம்.

ஆக.27: மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை இடிந்து விழுந்தது.

ஜூலை 5: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கொலை.






      Dinamalar
      Follow us