PUBLISHED ON : ஜன 01, 2025

தமிழகம்
மே3: திருநெல்வேலி கிழக்கு காங்., தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம்.
மே4: போலீசாரை அவதுாறாக பேசியது, கஞ்சா வழக்கில், தேனியில் யூடியுபர் சவுக்கு சங்கர் கைது.
மே7: ஊட்டி, கொடைக்கானல் செல்ல 'இ-பாஸ்' முறை அமல்.
மே9: சிவகாசி பட்டாசு தொழிற் சாலையில் வெடி விபத்து. 8 பேர் பலி.
ஜூன்2: கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம்.
ஜூன்11: திருமங்கை ஆழ்வார் வெள்ளி சிலையை தமிழகத்திடம் திரும்ப வழங்க பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை சம்மதம்.
ஜூன்15: குத்தகை காலம் முடிந்ததால், மாஞ்சோலை தேயிலை தோட்டம் மூடப்பட்டது.
இந்தியா
மே1: அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் முதன்முறையாக ஜனாதிபதி முர்மு வழிபாடு.
மே4: சடங்குகள் இல்லாத ஹிந்து திருமணம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
*பாலியல் வன்கொடுமை, பெண் கடத்தல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது.
மே12: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 12 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
மே15: குடியுரிமை சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
மே 20: புனேயில் ரியல் எஸ்டேட் அதிபர் விஷால் அகர்வாலின், மகன் வேதாந்த் 17, மதுபோதையில் கார் ஓட்டி விபத்து. 2 ஐ.டி., ஊழியர்கள் பலி.
மே25: குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் டி.ஆர்.பி., விளையாட்டு மையத்தில் தீ விபத்து. 28 பேர் பலி.
மே29: டில்லி வரலாற்றில் முங்கஸ்பர் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை (52.3 டிகிரி செல்சியஸ்) பதிவானது.
ஜூன்1: 18 வயதுக்கு குறைவானவர்கள் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டினால், ஆர்.சி., ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
ஜூன்4: லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி 293, 'இண்டியா' கூட்டணி 234 இடங்களை பிடித்தது. அகிலேஷின் சமாஜ்வாதி (39 இடம்) மூன்றாவது பெரிய கட்சியானது.
ஜூன்9: காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாத தாக்குதல். 9 பேர் பலி. பாகிஸ்தானின் 'தி ரெசிஸ்டன்ஸ்' அமைப்பு பொறுப்பேற்பு.
ஜூன்10: சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமால் பதவியேற்பு.
ஜூன்11: பிரதமர் மோடியின் தனி செயலராக பி.கே.மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம்.
ஜூன்12: ஹெலிகாப்டர் விபத்தில் மாலாவி நாட்டின் துணை அதிபர் சாலோஸ் சிலிமா பலி.
*ஒடிசா சட்டசபை தேர்தலில் பா.ஜ., 78 இடங்களில் வென்றது. முதல்வராக சரண் மாஹி பதவியேற்பு. நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஜூன்13: அருணாச்சல் முதல்வராக பா.ஜ.,வின் பெமா காண்டு மீண்டும் பதவியேற்பு.
ஜூன்19: பீஹாரில் நாளந்தா பல்கலையின் புதிய வளாகம் திறப்பு.
ஜூன்23: போட்டி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் சட்டம் நிறைவேற்றம்.
ஜூன்25: 'யுனெஸ்கோ' சார்பில் இந்தியாவின் 'இலக்கிய நகராக' கேரளாவின் கோழிக்கோடு தேர்வு.
ஜூன்26: உலக பொருளாதார அமைப்பின் பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இந்தியாவுக்கு 129வது இடம்.
ஜூன்30: 30வது ராணுவ தலைமை தளபதியானார் உபேந்திர திவேதி.
உலகம்
மே1: கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மிக அரிதாக பக்கவிளைவு ஏற்படும் என அந்நிறுவனம் பிரிட்டன் கோர்டில் ஒப்புதல்.
மே8: ரஷ்ய பிரதமராக மிஹாலி மிஷூஸ்டின் பதவியேற்பு.
மே12: வடக்கு மாசிடோனியாவின் முதல் பெண் அதிபராக கோர்டனா டவ்கோவா பதவியேற்பு.
மே13: ஆப்கன் வெள்ளத்தில் 300 பேர் பலி.
மே15: குவைத் பிரதமராக அகமது அல் அப்துல்லா பதவியேற்பு.
*சிங்கப்பூர் பிரதமராக லீ லுாங் பதவியேற்பு.
மே20: தைவான் அதிபராக லாய் சிங் பதவியேற்பு.
மே28: 13 நாளில் மூன்றுமுறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாளத்தின் பூர்ணிமா ஸ்ரீஸ்தா சாதனை.
ஜூன்4: மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளவ்டியா பதவியேற்பு.
ஜூன்12: குவைத்தின் மாங்கப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ. 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் பலி.
ஜூன்14: இத்தாலியில் நடந்த 'ஜி7' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.
ஜூன்15: ஸ்லோவாக்கியா அதிபராக பீட்டர் பெலிகிரினி பதவியேற்பு.
ஜூன் 25: பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே.
ஜூன்15: தென் ஆப்ரிக்க அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்பு.
பலே பாபு
ஜூன் 12: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வராக பவன் கல்யான் பதவியேற்பு.
மோடி 3.0
ஜூன் 9: தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி. 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்
ஜூன் 26: லோக்சபா தேர்தலில் காங்., 99 இடத்தில் வென்றது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் பதவியேற்பு.
நீல ரகசியம்
மே 1: மெக்சிகோவின் செடுமால் தீவில் உலகின் ஆழமான (1380 அடி) நீலத்துளை கண்டுபிடிப்பு.
தொடரும் துயரம்
ஜூன் 19: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் பலி.
டாப் - 3
ஜூன் 9: லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி (தமிழகம் 39, புதுச்சேரி 1) முழுமையாக வென்றது.
ஜூன் 11: கப்பல் படை ஹெலிகாப்டருக்கான இந்தியாவின் முதல் பெண் பைலட் ஆனார் அனாமிகா.
ஜூன் 26: லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் பதவியேற்பு.