/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
பாடலும் இசையும் மாமருந்து: உருக வைக்கும் உமா குமார்
/
பாடலும் இசையும் மாமருந்து: உருக வைக்கும் உமா குமார்
பாடலும் இசையும் மாமருந்து: உருக வைக்கும் உமா குமார்
பாடலும் இசையும் மாமருந்து: உருக வைக்கும் உமா குமார்
PUBLISHED ON : அக் 30, 2024

மருதமலை மாமணியே…. முருகையா… என்று டில்லி தமிழ்ச்சங்கத்தில் பாடி ரசிகர்களை பரவசப்படுத்தியவர் ஸ்விட்சர்லாந்து ஜூரிச் நகரில் வசிக்கும் உமா குமார். பிறந்தது திருச்சி என்றாலும், திருமணத்திற்கு பின் ஸ்விட்சர்லாந்தில் குடியிருந்து வரும் உமா குமார், கச்சேரிக்காக பறந்து கொண்டிருக்கிறார்.
கர்நாடக சங்கீதம், தமிழ்ப்பாடல்கள் மீதான காதலை நம்மிடம் விவரித்தார் கர்நாடக இசை மேதையான என் தாத்தா சாத்துார் ஏ.ஜி. சுப்ரமணியன் இசைப்பயணம் என்னையும் தொற்றிக் கொண்டது. சென்னை குயின்மேரி கல்லுாரியில் இளநிலை கர்நாடக சங்கீதம், சென்னை பல்கலையில் முதுநிலை பட்டம் பெற்றேன்.
ஆல் இந்தியா ரேடியோவில் பி கிரேடு' சான்றிதழ் பெற்றேன். திருமணத்திற்கு பின் 2001ல் ஸ்விட்சர்லாந்து வந்தோம். அப்போது அங்கு இந்தியர்கள் குறைவு. ஆனாலும் இசைப்பள்ளி ஆரம்பித்து கர்நாடக இசை கற்றுத்தர ஆரம்பித்தேன்.
தேடலே மனதுக்கு நிம்மதி
ஒவ்வொரு கச்சேரிக்கும் தலைப்புகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்ற பாடல்களை தேர்வு செய்வேன். தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகளின் பாடல்களோடு தமிழ் சினிமாவில் உள்ள கர்நாடக இசைப் பாடல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிறேன். சமீபத்தில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் போது நடந்த பேன் ஸோன்' நிகழ்ச்சியில் பங்கேற்றது பிரமிப்பாக இருந்தது.
டில்லி தமிழ்ச்சங்கத்தில் மதுரை சோமு பாடிய மருதமலை மாமணியே… முருகையா…' பாடலை பாடும் போது ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டனர். பாடலும் இசையும் மாமருந்து என்றால் மிகையில்லை. அஞ்சுதல் நிலைமாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்' என எண்ணிக்கையைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் அந்த பாடலில் எழுதியுள்ளார்.தமிழ்மொழியின் சிறப்பும் பாடலின் மேன்மையும் வேறொரு உலகத்திற்கு ரசிகர்களை அழைத்துச் சென்றது மறக்க முடியாத அனுபவம்.
வெளிநாட்டு கச்சேரிகளில் பலமொழி பேசும் இந்தியர்கள் பங்கேற்பதால் கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி, அபாங் என ரசிகர்களுக்கு பிடித்தவாறு பாடுவதை பெருமையாக நினைக்கிறேன்.
கர்நாடக சங்கீதம் பலருக்கு பிடித்திருந்தாலும் ரசிக்கத் தெரியவில்லை. அதன் தெய்வத்தன்மையை அனைவரும் உணர வேண்டும் என்றார்.