/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
அன்னநடை ஜிணுக்கு சிங்காரி: வங்க கடல் அலையில் முத்தாகி...: இலங்கை தமிழ் ராப் பாடகர் வாஹீசன் ராசையா
/
அன்னநடை ஜிணுக்கு சிங்காரி: வங்க கடல் அலையில் முத்தாகி...: இலங்கை தமிழ் ராப் பாடகர் வாஹீசன் ராசையா
அன்னநடை ஜிணுக்கு சிங்காரி: வங்க கடல் அலையில் முத்தாகி...: இலங்கை தமிழ் ராப் பாடகர் வாஹீசன் ராசையா
அன்னநடை ஜிணுக்கு சிங்காரி: வங்க கடல் அலையில் முத்தாகி...: இலங்கை தமிழ் ராப் பாடகர் வாஹீசன் ராசையா
PUBLISHED ON : அக் 30, 2024

'ஜிஞ்சிதமோ.. தமிழோவியமோ..
அடி மருதமோ
எந்தன் காவியமோ..
வள்ளுவனோ என் வாசுகியோ
தேவதையோ எந்த காதலியோ
அன்னநடை ஜிணுக்கு சிங்காரி
வங்க கடல் அலையில் முத்தாகி
வள்ளுவன் கை எடு எழுத்தாணி
அச்சு நகை கொண்ட அலங்காரி'
என துள்ளல் கொண்ட துாய தமிழ் வரிகளை 'ராப்' பாடலாய் பாடி இளைஞர்களை ஈழத்தமிழ் அழகில் கட்டி போட்டவர்
வாஹீசன் ராசையா. இவருடன் பாடகர் ஆத்விக், இசையமைப்பாளர் டிசோன், டிஜே சிவாஜி இணைந்து உருவாக்கிய 'மிட்நைட் கான்செர்ட்' வைரல் ஆனது. இலங்கை தாண்டி தமிழகத்திலும், மலேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர் என தமிழர்கள் வசிக்கும் எல்லா பகுதிகளிலும் இவர்களது துாய தமிழ் 'ராப்' பாடல்கள் வரவேற்பை பெற்று வருகிறது. வாஹீசன் ராசையாவின் தமிழ் உச்சரிப்பை கொண்டாடி வருகின்றனர். இவர் அளித்த பேட்டி....
“வைரலான 'மிட்நைட் கான்செர்ட்' எதேச்சையாக நடந்தது. இசை நிகழ்ச்சிக்காக இலங்கையில் கொழும்புவுக்கு டிஜேசிவாஜி வந்திருந்தார். அப்போது 'ராப்' பாட சென்ற எங்களின் தமிழ் பிடித்து போய் அன்று இரவு எதேச்சையாக செய்தது தான் இந்த 'ராப் மிக்ஸ்'.
இசை அல்லது ஒரு பீட் கேட்டாலே வரிகள் எழுதி விடுவேன். துாய தமிழ் வார்த்தைகளை போட்டு 'ராப்' பாடும் போது அதில் ஆற்றல் இருப்பதை உணர முடிகிறது. எனவே தமிழில் கொட்டி கிடக்கும் இத்தனை வார்த்தைகளை, மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என பாட, இசையமைக்க ஆரம்பித்தோம்.
இலங்கையில் உள்ள ஸ்டுடியோவில் நானும், ஆத்விக், இசையமைப்பாளர் டிஷோனும் சேர்ந்து சிறு பிராஜெக்ட்டுகளில் பாடல் தயாரித்து கொண்டிருந்தோம். கொரோனா நேரத்தில் சும்மா பாடிக் கொண்டிருந்தோம். துவக்கத்தில் கிண்டலடித்தனர். மேடையில் பாடச் சென்றால் மைக் தரமாட்டார்கள். ஆனால் தமிழ் பேச தெரிந்த எல்லாரும் எங்கள் பாடல் கேட்க வேண்டும் என்பது ஆசை. 'ராப் சிலோன்' என யுடியூப் சேனல் துவங்கி ராப் பாடல்களை பதிவிட்டு வந்தோம். இது இலங்கையில் இளசுகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ரட்டி ஆதித்தன் தான் எனது இன்ஸ்பிரேஷன். செந்தமிழில் 'ராப்' செய்வார். நாம் ஏன் இந்த வழியில் செல்லக்கூடாது என முடிவெடுத்தேன். தமிழால் தான் என்னை கொண்டாடினர். தமிழ் தான் எங்களை வாழ வைக்கிறது.சென்னையில் உள்ள டிஜே சிவாஜியுடன் இணைத்தது தமிழ் தான். நாம் வளர வேண்டும் என நினைத்தால் முயற்சி செய்தாலே வென்று விடலாம்.ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி, கம்பராமாயணம் என இலக்கியங்களில் உள்ள கருத்துக்களை எளிய நடையில் ராப் பாடல் மூலம் எடுத்துச் சொல்ல விருப்பம் உள்ளது. இனி வரும் பாடல்களில் செய்வோம்.
தோல்வியை நினைத்து கலங்காமல் முயற்சிக்க வேண்டும். ஒன்று கிடைக்கவில்லை என்றால் அது நமக்கானது கிடையாது. அதை விட பெரியது காத்திருக்கிறது என அர்த்தம். கிடைக்காததை நினைத்து வருந்த வேண்டாம். கடவுள் கொடுக்க தயாராக உள்ளார். கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். இலங்கையில் இப்போது தான் சினிமா வளர்ந்து வருகிறது. நாங்கள் முன்னுக்கு வந்தால் தான் எங்களுக்கு பின்னால் வரும் கலைஞர்களை துாக்கி விட முடியும் என்றார்.
கலைமகள் காலடியில் சரணடைந்தவன்
வாஹீசன் ராசையா எழுதிய ராப் பாடல் வரிகள்...
வறுமை அறிந்து வளர்ந்து பிணியில் கடந்து கரைந்தவன்
கவலை மறக்க கலைமகள் காலடியில் சரணடைந்தவன்
பறக்க துடிக்கும் பருந்து போல பறவை பார்த்து கிடந்தவன்
கலைமகளது இறையருளினில் சிறகு விரித்து பறந்தவன்
நான் காட்டுத்தீ... சகுனிகள் உள்ள ஆட்டத்தில்
கொடிய கூர்க்கத்தீ... ஆயுதங்கள் கூட்டத்தில்
கரிய மிருகத்தில் ஒளி பிறந்த நேரத்தில்
அடியின் தாகத்தில் தலைநிமிர்ந்தேன் வானத்தில்!