sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

தீபாவளி மலர்

/

பலகாரமும் பட்டாசும்: சந்தோஷத்தில் சாய் பிரியா

/

பலகாரமும் பட்டாசும்: சந்தோஷத்தில் சாய் பிரியா

பலகாரமும் பட்டாசும்: சந்தோஷத்தில் சாய் பிரியா

பலகாரமும் பட்டாசும்: சந்தோஷத்தில் சாய் பிரியா


PUBLISHED ON : அக் 30, 2024

Google News

PUBLISHED ON : அக் 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகழ் பெற்ற தியேட்டர்கள் இன்று மல்டி காம்ப்ளக்ஸ்களாக மாறி விட்டன. சென்னை தங்கசாலையில் இருந்த முருகன் தியேட்டரும் அதில் ஒன்று. அந்த தியேட்டர் உரிமையாளர் பரமசிவமுதலியாரின் கொள்ளு பேத்தி தான் தினமலர் தீபாவளி மலருக்காக நம்முடன் பேசும் நடிகை சாய்பிரியாதேவா.இவர் இடம் பெறாத விளம்பர படங்களே இல்லை. இயக்குனர் பி.வாசுவின் 'சிவலிங்கா' மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மலையாள சினிமாவையும் இவர் விட்டு வைக்கவில்லை. கவுதம் கார்த்திக்குடன் 'யுத்த சத்தம்', டோவினோவுடன் 'என்டே உம்மண்டே பேரு' என நடித்த படங்கள் பெரியளவில் இவருக்கு 'பிரேக்' பெற்று கொடுத்துள்ளன. சாய்பிரியா தேவா கூறியது...

சிறிய வயதிலேயே 'ஆக்டிங்' மீது ஒரு கண். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரும், தியேட்டர் நடத்திய கொள்ளு தாத்தாவும் நண்பர்கள். இந்நிலையில் எனக்கு சினிமா மீது ஈடுபாடு வராமலா இருக்கும்.

ஆனால் மரைன் இன்ஜினியரான அப்பாவுக்கு, நான் டாக்டராக வேண்டும் என்பது ஆசை. வீட்டிற்கு தெரியாமல் 19 வயதிலேயே விளம்பர படங்களில் நடிக்க தயாரானேன்.

அப்பாவும் என் ஆசையை புரிந்து கொண்டு,''முதலில் படித்து டாக்டராகு. நடிகர் ரஜினியிடம் அழைத்து சென்று சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுக்கிறேன்,'' என்றார். அதை நம்பி நானும் வெறித்தனமாக படித்தேன். உயர்கல்வியில் சேருமாறு அப்பா கூறினார். அப்போது பெரிய நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நடிக்கவில்லை.

விளம்பர படத்துக்காக நான் எடுத்த போட்டோ ஒன்று பத்திரிக்கையில் வெளியாக, அது குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டது. சினிமாவே வேண்டாம் என்றனர். வீட்டில் இருந்தால் நடிக்க முடியாது எனக் கருதி, விடுதி ஒன்றில் தங்கி வாய்ப்பு தேடினேன். இதனால் குடும்பத்தினர் எட்டு மாதங்கள் என்னுடன் பேசவில்லை. பிறகு என் விளம்பர படத்தை பார்த்து நண்பர்கள், உறவினர்கள் பாராட்டிய பிறகு தான் அவர்கள் என்னை வீட்டிற்கு அழைத்து கொண்டனர்.

திரைப்பட பூஜை ஒன்றில் இயக்குனர் வாசுவிடம் என்னை உறவினர் அறிமுகப்படுத்தினார். சிறியவளாக இருப்பதால் இரண்டு ஆண்டுகள் கழித்து பார்த்து கொள்ளலாம் என பி.வாசு கூறி விட்டார். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்தித்தேன். அப்படி கிடைத்தது தான் 'சிவலிங்கா' வாய்ப்பு.

பிறகு 'பூம் பூம் காளை, யுத்த சத்தம், டைனோசர்ஸ், பாம்பாட்டம்' உள்ளிட்ட படங்களில் வாய்ப்பு கிட்டியது. தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். கிராமத்து பெண்ணாக நடிக்க ஆசை. ஆனால் தமிழ் பெண் என்றாலே கருப்பாக காட்ட வேண்டும் என தமிழ் சினிமாவில் நினைக்கின்றனர். உண்மையில் தமிழ் பொண்ணுங்க தான் அழகு. கடவுளை நம்புவள் நான்.

நடை தான் என் பொழுதுப்போக்கு. ஓய்வு நேரங்களில் நடந்து கொண்டே இருப்பேன். அழகு பற்றி எல்லோருமே கேட்கிறார்கள். கொஞ்சம் காலமாக தினை, சாமை, குதிரைவாலி என நம் பராம்பரிய உணவுக்கு மாறி விட்டேன். கொஞ்சம் யோகா, தியானம். அவ்வளவு தான் என் அழகின் ரகசியம்.

மியூசிக் கேட்டு கொண்டே ஜாலியாக கார் ஓட்டுவேன். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை பெற்றோர், தோழிகளுடன் கொண்டாடுவேன். பட்டாசு இல்லாத தீபாவளி இல்லை. பட்டாசு வெடிக்க பிடிக்கும். தீபாவளிக்கு அம்மா செய்யும் பலகாரமும், பட்டாசும் 'மை பேவரட்'.

நானெல்லாம் மத்தாப்பு,

புஸ்வானம், சங்கு சக்கரம்

வெடிக்கும் ஆள். வெடி

ரகங்களுக்கும் நமக்கும்

காததுாரம். எல்லோரும்

பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளி

கொண்டாட வாழ்த்துக்கள்!






      Dinamalar
      Follow us