நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியாத தெரு விளக்குகள் விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்பில் இரவில் தெருவிளக்குகள் சரியாக எரியாததால் மர்ம நபர்களின் நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைகின்றனர்.
-சுகந்தி, விழுப்புரம் சிக்னலை மதிக்காத வாகன ஓட்டிகள் விழுப்புரம் எம்.ஜி., ரோடு அருகேவுள்ள சிக்னலை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படும் நிலையுள்ளது.
-பற்குணம், விழுப்புரம் நாய் தொல்லையால் அச்சம் திண்டிவனம், மாரியம்மன் கோவில் வீதி, வாணிய பிள்ளையார் கோவில் வீதிகளில் தெரு நாய்களின் தொல்லையால் அவ்வழியே செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.
- சுரேஷ் பாலாஜி, திண்டிவனம் குண்டும், குழியுமான சாலை விழுப்புரம் மகராஜபுரம் மகாதேவன் நகருக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகின்றனர்.
- சிங்காரவேலன், விழுப்புரம்