நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை ஆக்கிரமிப்பு
தியாகதுருகத்தில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நெடுஞ்சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், தியாகதுருகம்.
நிழற்குடை அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-திருமால், ரோடுமாமந்துார்.
ஆற்றில் கலக்கும் கழிவு நீர்
கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல்முருகன், கச்சிராயபாளையம்.
சாலையில் மண் குவியல்
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மண் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
-பிரபாகரன், தச்சூர்.