ADDED : ஜூலை 28, 2025 10:19 PM

பாயும் கழிவு நீர்
பெரியாயிபாளையத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவில், அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாப் உள்ளிட்டவை இருக்கும் பிரதான ரோட்டில் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் சென்று வருகிறது. - ஆறுமுகம், பெரியாயிபாளையம்.
அபாயத்தில் மின் கம்பம்
திருப்பூர், லட்சுமி நகர் 4வது வீதி, மில்லர் பஸ் ஸ்டாப் மெயின் ரோட்டில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. - ஜெகதீஷ், லட்சுமி நகர்.
சாலை பணி தாமதம்
திருப்பூர், வளம்பாலம் ரோடு வழியாக காங்கயம் ரோடு இணைக்கும் சந்திப்பில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அந்த ரோட்டில் மாதக் கணக்கில் ரோடு அமைக்காமல் கால தாமதம் செய்கின்றனர். ஜல்லிகற்களாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். - லோகநாதன், செல்வலட்சுமி நகர்.
சுகாதார சீர்கேடு
குமரானந்தபுரம், பிச்சம் பாளையம் இட்டேரி ரோடு ராம்குமார் வீதி மெயின் ரோட்டில் குப்பை அள்ளப்படாமல் சுகாதார கேடாக உள்ளது. - நடராஜ், பிச்சம்பாளையம்.
வீணாகும் குடிநீர்
திருப்பூர் - மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. - இளையராஜா, பாரப்பாளையம்.
மோசமான ரோடு
இச்சிப்பட்டியில் இருந்து தேவராயம்பாளையம் செல்லும் ரோடு குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. - ராமசாமி, இச்சிபட்டி.
கால்வாய் இல்லை
திருப்பூர், அரண்மனைபுதுார், 4வது வீதியில் சாக்கடை கால்வாய் வசதியில்லாமல், ஆபத்தான நிலையில் உள்ளது. - சுதா, அரண்மனைபுதுார்.
அபாய தொட்டி
பல்லடம், மலையம்பாளையம் பள்ளி அருகில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் தண்ணீர் தொட்டி உள்ளது. உடனடியாக இதை சரி செய்ய வேண்டும். - சுப்ரமணியம், மலையம்பாளையம்.
குப்பை கழிவுகள்
திருப்பூர், போயம்பாளையம், கஞ்சம்பாளையம், சுத்திகரிப்பு நிலையம் அருகே குப்பை கழிவுகள் அள்ளப்படாமல், தேங்கி கிடக்கிறது. - நந்தகுமார், போயம்பாளையம்.
பணிகள் தாமதம்
திருப்பூர், பாரப்பாளையம் மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாய் பணி மந்தமாக நடக்கிறது. நீண்ட நாட்களாக கட்டப்படாமல் உள்ளது. - கார்த்திக், பாரப்பாளையம்.