தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 31

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 31

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 31


PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் பேச்சு: சாதாரண, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காகவே, அரசு சார்பில் தரமான பால் பொருட்கள் தயார் செய்து விற்க வேண்டும் என்ற அடிப்படையில், ‘ஆவின்’ நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. தரமான பொருட்களை குறைந்த விலையில் விற்க வேண்டும். இவற்றை தனியார் பொருட்களோடு ஒப்பிடுவது தவறான கருத்து. அரசு அறிவித்துள்ள விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

ஆவின் நஷ்டத்துக்கு நிர்வாகச் சீர்கேடுகளும் ஒரு காரணம்... அவற்றை சரி பண்ணிட்டு, அப்புறமா விலையை ஏத்தியிருக்கலாமே!

தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ் பேட்டி: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதுள்ள ஊழல் புகாரில், சட்டம் தன் கடமையை செய்துள்ளது. ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்’ என சட்டம் சொல்கிறது. லஞ்சம் ஒழிய வேண்டும் என்றால், கொடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும்; அப்போது தான் யாரும் கொடுக்க மாட்டார்கள். கொடுக்க ஆள் இல்லாதபோது, லஞ்சம் தானாக மறைந்துவிடும். எனவே, மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும்.

நல்ல கருத்து தான்... அப்படி செய்தால் தான், எதிர்காலத்தில் லஞ்சம் கொடுக்க எல்லாரும் பயப்படுவாங்க!

பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: மேடைக்கு மேடை, ‘சமூக நீதி, கல்வி புரட்சி’ என வாய் கிழிய பேசுவோரின் உண்மையான முகம் இதுதான் என்பதை, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷின் 100 கோடி ரூபாய் ஊழல் காட்டிக் கொடுத்து விட்டது. இந்த ஊழல் தனிப்பட்ட முறையில் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இதற்கு பின்னால் உள்ள உயர்மட்ட அரசியல் தலைவர்கள், கல்வித்துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் அடங்கிய மிகப்பெரிய ஊழல் வலைப்பின்னலை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

‘உயர்மட்ட அரசியல் தலைவர்’ எனக்கூறி, மகேஷின் தலைவர் ஸ்டாலினையும் இதுல, ‘கோர்த்து’ விட பார்க்கிறீங்களோ?

ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி:


ஏற்கனவே, திரைத்துறையில் இருந்து எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு வந்து சாதனை படைத்தார். தற்போது, முதல்வர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதேநேரம், நம்மை ஆள்வதற்கு தகுதியான தலைவர்களை திரையில் மக்கள் தேடக்கூடாது. திரை கவர்ச்சியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்.
- சினிமாவில் இருந்து வந்தாலும், மக்கள் ஓட்டு போட்டு தானே தலைவர்களை தேர்வு செய்றாங்க... ஜனநாயகத்தில் இதை தவறுன்னு சொல்ல முடியாதே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us