PUBLISHED ON : நவ 01, 2026 12:00 AM

தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் பரந்தாமன் அறிக்கை: மின்சாரம், சட்டம், சிறை, ஊழல் தடுப்பு என நிறைய துறைகளை கையில் வைத்திருக்கும் அமைச்சர் நிர்மல்குமார் எல்லா துறைகளிலும் சோடை போயிருக்கிறார்.
மின்வெட்டு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு லஞ்சம், 50 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்தது என, நிர்மல்குமாரின் துறைகள் மோசமாக செயல்படுகின்றன. நிர்மல்குமாரை உடனே அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
உங்க கட்சியை தொடர்ந்து விமர்சிக்கும் நிர்மல்குமாரின் துறைகளில் இருக்கும் தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் தான், இவ்வளவு குளறுபடிகளையும் பண்ணியிருப்பாங்களோ?
முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்து, உயிர் பிழைத்து ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரி அனுசுயா பேட்டி: ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளை சிறை இருக்கும். அங்கு, விசாரணை கைதிகள் தான் இருப்பர்; தண்டனை கைதிகள் இருக்க மாட்டார்கள். புழல் போன்ற மத்திய சிறையில் தான் தண்டனை கைதிகள் அடைக்கப்படுவர்.
கைதிகள் தப்பிய சம்பவத்தில் முதல்வர் விஜய் மற்றும் அரசை குறை சொல்வது சரியல்ல; சிறை காவலர்களின் அஜாக் கிரதையே காரணம்.
அலட்சியமாக இருந்த சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாலே, இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி:
த.வெ.க., ஆட்சிக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தினால் தான் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் இல்லாமல் இருந்திருந்தால் அதிக இடங்களில் ஜெயித்து இருப்பர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் ஈடுபட்டது தி.மு.க.,வினர் தான். அதனால் தான் முதலில் அவர்கள் வாயை திறக்கவில்லை. இப்போது இந்தியாவே கொந்தளித்த பின், அவர்களும் சேர்ந்து, ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தினால் தான் தோற்று விட்டோம்’ என கூறுகின்றனர்.
- த.வெ.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்த நிமிடத்திற்கு முன்பு வரை நீங்கள், தி.மு.க., கூட்டணியில் தான் இருந்தீங்க... தி.மு.க.,வோட ஆதரவுல தான், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமும் நடந்தது... தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட சென்னை கொளத்துாரில் மட்டும், 1 லட்சம் வாக்காளர்களை நீக்கியிருக்காங்க... அப்படி என்றால், ஸ்டாலின் தோற்கணும்னு தி.மு.க.,வினரே, ‘உள்ளடி’ வேலை பண்ணிட்டாங்களோ?
