/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'அரசியல்வாதி மாதிரி பேசுறாங்களே!'
/
'அரசியல்வாதி மாதிரி பேசுறாங்களே!'
PUBLISHED ON : ஆக 21, 2025 12:00 AM

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் ஓடும் பகிங்ஹாம் கால்வாயில் எண்ணெய் கழிவு கலக்கும் விவகாரத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க கோரி, மா.கம்யூ., கட்சி சார்பில், எர்ணாவூர் - பாரத் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பின், அக்கட்சியினர், ராமகிருஷ்ணா நகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்திற்கு சென்று மனு வழங்கினர்.
செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள், இந்த விவகாரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிய, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனிதாவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், 'பறக்கும் படைகள் செயல்படுகின்றன. மெல்லிய அளவிலேயே எண்ணெய் பாதிப்பு உள்ளது. மக்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம். விரைவில் மக்கள் மகிழ்ச்சியடைவர்...' என, பதில் அளித்தார்.
இதை கேட்ட இளம் நிருபர் ஒருவர், 'எடுத்த நடவடிக்கையை சொல்லாம, அரசியல்வாதி மாதிரி பேசுறாங்களே...' என முணுமுணுக்க, 'அவங்களுடன் பழகி, அதிகாரிகளும் இப்படி ஆகிட்டாங்க...' என கூறி, பேச்சை முடித்தார் மூத்த நிருபர்.