PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

மயிலாடுதுறை வந்த மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்கள் பதவி பறிபோகும் என்ற புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றினால், பா.ஜ.,விற்கு பிடிக்காத முதல்வர்கள், அமைச்சர்களை கைது செய்து, 30 நாட்கள் சிறையில் அடைக்க முடியும்.
'மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு பிடிக்காத பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர்களை கூட, இச்சட்டத்தை பயன்படுத்தி பதவியில் இருந்து அப்புறப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதை எதிர்த்து, கண்டன போராட்டங்கள் நடத்துவோம். மத்திய அரசு இந்த புதிய மசோதாவை திரும்ப பெற வேண்டும்...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவங்க போராட்டம் நடத்தி எல்லாம், மத்திய அரசு பணிஞ்சிடுமா என்ன...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.