PUBLISHED ON : ஆக 31, 2025 12:00 AM

கடலுார் மாவட்டம், நெய்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.
அவர் பேசுகையில், 'தமிழகத்தில், ம.தி.மு.க., என்ற கட்சியே இல்லை என சிலர் பேசுகின்றனர். 30 ஆண்டுகள் தி.மு.க.,விலும், 31 ஆண்டுகள் ம.தி.மு.க., விலும் என, 61 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் பயணித்துள்ளேன்.
'மத்திய அமைச்சராக வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்கவில்லை. அப்படிப்பட்ட என்னை சுயநலவாதி என்றும், பா.ஜ., கூட்டணியில் இணைய போவதாகவும் கூறுகின்றனர். 2026 சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., ஆதரவு இல்லாமலே, தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இருந்தாலும், ம.தி.மு.க., தொடர்ந்து தி.மு.க.,வுக்கே ஆதரவளிக்கும்...' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'நாங்க இல்லாம, தி.மு.க., ஆட்சி இல்லன்னு சொல்லாம, ரொம்பவே அடக்கி வாசிக்கிறாரே...' என முணுமுணுக்க, மற்றொரு தொண்டர், 'அந்தக் காலமெல்லாம் மலையேறிடுச்சு பா...' என, பெருமூச்சு விட்டபடியே கிளம்பினார்.