PUBLISHED ON : ஆக 16, 2025 12:00 AM

மதுரை, அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், மா.கம்யூ., கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின் சண்முகம் அளித்த பேட்டியில், 'தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், விவசாயிகளுக்காக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என்ற அக்கறை, எங்களை விட ஆளுங்கட்சிக்கு தான் அதிகம் இருக்க வேண்டும். தி.மு.க., கூட்டணியில் நீடித்தாலும், எப்போதும் ஆட்சியிலோ, அதிகாரத்திலோ பங்கு கேட்க மாட்டோம்...' என்றார்.
இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஆமா... இவங்க கேட்டுட்டாலும், தி.மு.க.,வினர் கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே நடந்தனர்.