PUBLISHED ON : ஆக 15, 2025 12:00 AM

தி.மு.க., அரசை கண்டித்து, சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. புறநகர் மாவட்டச் செயலர் இளங்கோவன், அமைப்புச் செயலர் செம்மலை உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
மாநில இலக்கிய அணி செயலர் வைகைசெல்வன் பேசுகையில், 'நாங்கள் அமைச்சராக இருந்தபோது தலைமை செயலகம் சென்றால், முன்னாடி ஒருவர், பின்னாடி ஒருவர் மட்டும் வருவர். எந்த பதவியிலும் இல்லாத, 'நம்ம மாவட்டம்' இளங்கோவன் வந்தால் அவருடன், 100 பேர் வருவர். அவர் மக்கள் தலைவர்; சகல யோகம் உள்ளவர்; கிங் மேக்கர். என்னையும், செம்மலையையும், எம்.எல்.ஏ., ஆக்கி விடுங்கள். இங்கேயே கோரிக்கை வைக்கிறோம்...' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'இது, தி.மு.க.,வை கண்டிக்கிற கூட்டமா... நம்ம மாவட்டச் செயலருக்கு ஐஸ் வைக்கிற கூட்டமா...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.