ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லும் 'மக்கள் காவலன்' ?
சந்தோஷ் குமார் இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள 'மக்கள் காவலன்' படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
படத்தைத் தணிக்கை செய்ய அனுப்பியபோது, படத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் ரீதியான சில காட்சிகள், சில வசனங்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தை மறு தணிக்கைக்காக ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்கினால் மட்டுமே படம் டிசம்பர் 4ம் தேதி வெளியாக முடியும். இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அது நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இதனால், படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' படம் கூட இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டதால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. அதன்பின் ரிவைசிங் கமிட்டி சான்றிதழ் பெற்று ஜூலை மாதம் வெளிவந்தது.