அறம் பட பாணியில் உருவாகும் வெப்சீரிஸில் நடிக்கும் தபு
ADDED : 36 minutes ago
நடிகை தபு நடிப்பில் கடந்த மாதம் ஹிந்தியில் த்ரிஷ்யம் 3 படம் வெளியானது. அடுத்ததாக நாகார்ஜுனாவின் நூறாவது படமாக உருவாகி வரும் கிங் 100 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் முதன்முறையாக வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்கிறார். 2023-ல் உத்தரகாண்டில் நிகழ்ந்த சுரங்கப்பாதை விபத்து, அதில் சிக்கிய 41 கட்டுமானத் தொழிலாளர்கள் 17 நாட்கள் போராடி மீட்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மீட்புப் பணி என முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப்சீரிஸ் உருவாகிறது. கிட்டத்தட்ட அறம் படத்தில் நயன்தாரா நடித்தது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் தான் தபு நடிக்க இருக்கிறாராம். ரயில்வே மென் என்கிற வெப்சீரிஸை இயக்கிய ஷிவ் ரவைல் தான் இந்த வெப்சீரிஸை இயக்குகிறார்.