வட அமெரிக்காவில் 225 கோடி வசூல் கடந்த 'ராமாயணா'
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 15ல் வெளியான ஹிந்திப் படம் 'ராமாயணா'.
இப்படம் கடந்த வாரத்தில் உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்தது. தற்போது 1300 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வட அமெரிக்காவில் மட்டும் 24 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை இப்படம் கடந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 225 கோடி.
இப்படம் தற்போது வட அமெரிக்காவில் அதிக வசூலைக் குவித்துள்ள இந்தியப் படங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் இதற்கு முன்பு வெளிவந்த 'துரந்தர் 2' படம் 28 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது. 'துரந்தர் 1, பாகுபலி 2' ஆகிய படங்களின் வசூலை 'ராமாயணா' முறியடித்துள்ளது.
'துரந்தர் 2' வசூலையும் முறியடித்து நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.