உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தலைமுடி வெட்டியதால் அம்மா ஷாக் ஆகிட்டாங்க : சாய் பல்லவி

தலைமுடி வெட்டியதால் அம்மா ஷாக் ஆகிட்டாங்க : சாய் பல்லவி

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா நடித்துள்ள ​‛ஓம்' படம் இந்தவாரம் நவம்பர் 20ல் ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து சாய் பல்லவி பேசுகையில், ‛‛ஓம் படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வருகிறேன். அந்த கெட் அப்புக்காக என் தலைமுடியை வெட்டிய பிறகு, அம்மாவுக்கு வீடியோ கால் செய்தேன். என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அம்மா உடனே அழைப்பைத் துண்டித்துவிட்டார். அப்பா, 'அது விக் தானே?' என்று கேட்டார். நான் உண்மையிலேயே தலைமுடியை வெட்டிவிட்டேன் என்று கூறினேன். அதன் பிறகுதான் அம்மாவை அப்பா சமாதானப்படுத்தினார்.

பொதுவாக வேறு இயக்குநர்களின் படங்களுக்காக என்றால் நான் தலைமுடியை வெட்டியிருக்க மாட்டேன். இயக்குநர் ராஜ்குமாருக்காக மட்டுமே இதைச் செய்தேன். இதற்காக மெரின் ஜோசப் ஐபிஎஸின் புகைப்படத்தையே அவர் எனக்கு முன்னுதாரணமாகக் காட்டினார்'' என்றார்.

சாய்பல்லவி குறித்து பேசிய தனுஷ், ‛‛சாய் பல்லவி இயற்கையின் குழந்தை. புட்டபர்த்தி சாய்பாபாவே அவர் கையில் தூக்கி பெயர் வைத்த குழந்தை. அதனால்தான் அவர் 'சாய் பல்லவி'. அந்த ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !