உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் அறிமுகம் ஆகும் சாய்குமார் மகன்

தமிழில் அறிமுகம் ஆகும் சாய்குமார் மகன்

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் சாய்குமார். இவரது மகன் ஆதி தெலுங்கில் நடித்து வருகிறார். இப்போது 'பத்துநாள் ராஜா' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருடன் இன்னொரு முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார். மேலும் கருடா ராம், ஆடுகளம் நரேன், பருத்திவீரன் சரவணன், 'ஆதித்யா' கதிர் உள்பட பலர் நடிக்கின்றனர். குரு சரவணன் இயக்க, எஸ்ஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.சுரேஷ் தயாரிக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் குரு சரவணன் கூறும்போது, ஒவ்வொரு நடுத்தர குடும்பங்களும் இன்று சந்திக்கும் பிரச்னையை உண்மைச் சம்பவங்களுடன் இப்படம் பேசுகிறது. கடன் செயலியில் பணம் வாங்கிக் கொண்டு மக்கள் படும் கொடுமைகளைச் செய்தித்தாள்களில் பார்க்கிறோம். அதன் பின்னணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கு சில ஹீரோக்களிடம் பேசினோம். கால்ஷீட் பிரச்னை காரணமாக இதில் நடிக்க இயலவில்லை.

நடுத்தர இளைஞர் கதாபாத்திரத்துக்கு சதீஷ் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறார். இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சதீஷை இதில் சீரியஸாகப் பார்க்கலாம். சாய்குமாரின் மகன் ஆதிக்கு தமிழில் சிறந்த அறிமுகமாக இப்படம் இருக்கும். இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் உருவாக்கியுள்ளோம். தெலுங்கில் 'ஈகோ ராஜா' என்று தலைப்பு வைத்துள்ளோம். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாக இருக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !