உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்: ஹாட்ரிக் நாயகி அனிஷ்மா சொல்கிறார்

நடிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்: ஹாட்ரிக் நாயகி அனிஷ்மா சொல்கிறார்


மலையாளப் படத்தில் இருந்து 'சிறை' படம் மூலம் தமிழுக்கு வந்தவர் அனிஷ்மா. அதன்பிறகு யூத், மொத ராத்திரி படங்களில் நடித்தார். மூன்று படமுமே ஹிட்டானது. 'சிறை' கலையரசியும் 'யூத்' கனகவல்லியும் 'மொத ராத்திரி' முத்துச்செல்வியும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனார்கள். அறிமுகமாகி ஹாட்ரிக் வெற்றி கொடுப்பது ஒரு சில நடிகைகளுக்கே அமையும் அது அனிஷ்மாவுக்கு அமைந்திருக்கிறது.

ஆனாலும் அவர் தான் இன்னும் நடிக்க கற்றுக் கொண்டிருப்பதாகவே கூறுகிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிக்க வரும்போது வெறும் ஆசை மட்டும்தான் இருந்தது. வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. அதனால நடிப்புக்கு பயிற்சி எதுவும் எடுத்துக்கல. ஸ்பாட்ல பார்த்து கற்றுக்கொண்டதுதான். கதை கேட்கும்போதே, அந்த கதாபாத்திரமாக என்னை நினைத்துக் கொள்வேன். ஷூட்டிங் ஸ்பாட் வந்ததும் இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறார், அவர் எப்படிச் சொல்றாரோ, அப்படித்தான் நடிக்கிறேன். இதுவும் ஒரு கற்றல் முறைதான். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புல ஏதாவது புது விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்.

கதை கேட்கும்போதே இது சரியான கதையா, இல்லையான்னு புரிஞ்சிரும். மனசுக்குள்ள ஒரு விஷூவல் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியா பொருந்துவேனா, அதுல நடிக்க என்ன ஸ்கோப் இருக்குன்னு பார்ப்பேன். சில நேரம் இந்தக் கதையை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு தோணும். அப்படி தோணுச்சுன்னா, உடனே ஓகே சொல்லிருவேன். சில படங்களைப் பார்க்கும்போது, இந்த கேரக்டர்ல நான் நடிச்சிருக்கணும்னு தோணும்.

'சிறைக், 'யூத்' படங்களுக்குப் பிறகு 'மொத ராத்திரி' எனக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கு. தொடர்ந்து நல்ல கதைகள்ல நடிக்கணும். என்கிறார் அனிஷ்மா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !