உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கில்லி' பட விஜய்யின் தங்கைக்கு திருமணம்

'கில்லி' பட விஜய்யின் தங்கைக்கு திருமணம்


விஜய் - சூர்யா நடிப்பில் வெளியான 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்கள், சீரியல்களில் நடித்தவர் நான்சி ஜெனிபர். இவர் விஜய் நடித்த 'கில்லி' திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இப்படத்தின் மூலம் விஜய் தங்கையாகவே அறியப்பட்ட அவர், 'வள்ளி, சித்தி 2' சீரியலிலும் நடித்துள்ளார்.

36 வயதாகும் நான்சி ஜெனிபர் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த நிலையில், இன்று (நவ.,15) கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !