'ஓம்' : மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவாரா தனுஷ்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரைப்படம் இந்த வாரம் நவம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த 'அமரன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடித்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள 'ஓம்' படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 16ம் தேதி இப்படம் வெளியாகும் என்று முதலில் அறிவித்திருந்தார்கள். ஆனால், ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ல் வெளியானதால் இப்படத்தின் வெளியீட்டை நவம்பர் 20க்குத் தள்ளி வைத்தார்கள்.
'ஆபரேஷன் மோல்' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே 'ஓம்'. இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. செம்மரக் கடத்தல் பற்றிய கதையாக இருக்கலாம் என டிரைலரைப் பார்த்த பின்பு யூகிக்க முடிகிறது.
தனுஷ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'கர, இட்லி கடை, குபேரா' ஆகிய படங்கள் தமிழில் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அந்தத் தோல்விகளை 'ஓம்' படம் சரி செய்து தனுஷை மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அது எப்படி அமையப் போகிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.