நவம்பர் 20ல் 6 படங்கள் வெளியீடு
2026ம் ஆண்டின் கடைசி சில வாரங்களில் இருக்கிறோம். கடந்த வாரம் நவம்பர் 13ம் தேதி வெளியான படங்களுடன் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 190ஐக் கடந்துவிட்டது.
இந்த வாரம் நவம்பர் 20ம் தேதி, “அப்பா குட்டி, ப்ளாக், ஓம், சத்தியவான் சாவித்திரி, வயலெட் கனவு, வெகுளி” ஆகிய 6 படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தனுஷ் நடித்துள்ள 'ஓம்', விஜய் ஆண்டனி நடித்துள்ள 'அப்பா குட்டி', கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சத்தியவான் சாவித்திரி' ஆகிய படங்கள் மீது ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. 'ப்ளாக்' படம் கடந்தவாரம் ரிலீசாவதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டு இந்த வாரம் வெளியாகிறது.
தீபாவளிக்கு வெளியான படங்கள் இரண்டு வாரங்கள் முடிய உள்ள நிலையில் அவற்றிற்கான தியேட்டர்கள் வெகுவாகக் குறைந்துவிடும். எனவே, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மூன்று முக்கிய படங்களில் தனுஷ் நடித்துள்ள 'ஓம்' படம் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகலாம். எஞ்சியுள்ள முக்கிய தியேட்டர்களில்தான் மீதமுள்ள படங்கள் வெளியாகும்.