“முரட்டுத்தனமானவர்” : 13 வருடத்திற்கு முன்பு மம்முட்டியுடன் நடித்தபோது தனுஷின் எண்ணம் இதுதான்
தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஓம். ஏழு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகர் மம்முட்டி. அந்த அளவிற்கு கதையும் கதாபாத்திரமும் அவரை ஈர்த்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் தனுஷுக்கு இது மம்முட்டியுடன் முதல் படம் அல்ல. கடந்த 2013ல் மலையாளத்தில் வெளியான கம்மத் அண்ட் கம்மத் என்கிற படத்தில் மம்முட்டியுடன் நடித்துள்ளார் தனுஷ். அந்த படத்தில் ஹோட்டல் அதிபரான மம்முட்டி கேரளாவில் தனது புதிய கிளையை திறந்து வைக்க நடிகர் தனுஷை சிறப்பு விருந்தினராக வைப்பதாக அந்த காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் தனுஷாகவே நடித்திருந்தார்.
அப்போது மம்முட்டியுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தனுஷ் பேசும்போது, வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே அந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து பணியாற்றினேன். அந்த சிறிய சந்திப்பின்போது மம்முட்டியின் நடவடிக்கைகளை பார்த்ததும் அவர் சற்று முரட்டுத்தனமான குணம் கொண்டவராக இருக்கலாமோ என்று நினைத்தேன். தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓம் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய போது தான் அவரைப் பற்றிய கருத்து முற்றிலுமாக மாறிவிட்டது. அவருடைய நக்கல் கலந்த பதில்களும் தனித்துவமான உரையாடல் பாணியையும் குறிப்பிட்டு சொன்னால் மம்முட்டி சார் என்றால் தக் லைப் என்று சொல்ல வேண்டும் என அவரைப் பற்றி கலகலப்பாக புகழ்ந்து பேசி உள்ளார் தனுஷ்.