உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஹே ராம்' வார்த்தையை பேச 200 முறை ரிகர்சல் செய்த அனுபம் கெர்

'ஹே ராம்' வார்த்தையை பேச 200 முறை ரிகர்சல் செய்த அனுபம் கெர்

தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான ராமாயணா திரைப்படம் பாலிவுட்டில் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. படத்தில் ராவணனாக நடித்த யஷ் அதிக அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த படத்தில் ராவணன், சீதையை கடத்தும் போது அதை தடுக்க ஜடாயு ராவணனுடன் மோதும் காட்சி பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளது. பலரும் இதை பாராட்டி பேசுகிறார்கள். இந்த படத்தில் ஜடாயு கதாபாத்திரம் பேசும் சில நொடி வசனங்களுக்காக குரல் கொடுத்திருப்பவர் பிரபல நடிகர் அனுபம் கெர். குறிப்பாக ராவணனுடன் போரிட்டு மடியும்போது 'ஹே ராம்' என்கிற வார்த்தையை ஜடாயு உச்சரிக்கும்.

இந்த சண்டை காட்சிகளை டப்பிங் ஸ்டுடியோவில் அனுபம் கெருக்கு திரையிட்டு காட்டிய போது அதை பார்த்து அவர் திகைத்துப் போய்விட்டார். அந்த காட்சியின் பிரம்மாண்டத்தை பார்த்துவிட்டு அன்று திட்டமிடப்பட்டிருந்த டப்பிங் பணியை ரத்து செய்துவிட்டு மறுநாள் வருகிறேன் என கூறி விட்டாராம். அப்படி அவர் பேசும் அந்த 'ஹே ராம்' என்கிற வார்த்தை மிக சரியாக அமைய வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 200 முறை பலவிதமாக பேசி பேசி ரிகர்சல் செய்தாராம் அனுபம் கெர். வழக்கமாக ஒரு சிறிய காட்சியின் டப்பிங்கை முடிக்க 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றாலும், இந்த ஜடாயுவின் மரணத்தை பேசும் பத்து முதல் 12 வரிகளை துல்லியமாக பதிவு செய்ய தனக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஆனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !