உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காசு கொடுத்தால் கூட்டம் வரும் : யாரை சொல்கிறார் விஜய் சேதுபதி?

காசு கொடுத்தால் கூட்டம் வரும் : யாரை சொல்கிறார் விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். சமீபகாலமாக தமிழில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சமயத்தில் கமல் தனது அரசியல் கருத்துக்களை சூசகமாக கூறுவதற்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தினார். அதுபோல விஜய் சேதுபதியும் பயன்படுத்துகிறாரோ என தோன்றும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பற்றி மறைமுகமாக அவர் விமர்சித்ததாக ஒரு சலசலப்பு எழுந்து அடங்கியது.

இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியபோது அரங்கில் இருந்தவர்கள் கைதட்டினார்கள். பின்னர் உள்ளே இருந்த போட்டியாளர்களை காட்டியதும் அந்த அளவிற்கு கைதட்டாமல் அமைதியாக இருந்தபோது அவர்களை நோக்கி, அவர்களுக்கும் கைதட்டுங்கள். எனக்கு வெளியே வந்து கூட கை தட்டிக் கொள்ளலாம். அதற்கான கூட்டத்தை கூட நான் ஏற்பாடு செய்து தருகிறேன். இப்போதெல்லாம் காசு கொடுத்து தானே பலர் கூட்டம் கூட்டுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

நடிகர்கள் யாரையும் மறைமுகமாக சொல்கிறாரா விஜய் சேதுபதி என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !