உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா X ஹோம்பாலே என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் சூர்யா 48வது படம்!

சூர்யா X ஹோம்பாலே என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் சூர்யா 48வது படம்!


ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள 'சீன்' படம் கடந்த ஆறாம் தேதி வெளியாகி இதுவரை 227 கோடி வசூலித்துள்ளது. நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதையடுத்து தற்போது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்த 'ஜெய் பீம்' படத்தை இயக்கிய டி.ஜே. ஞானவேல் இயக்கும் படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார் சூர்யா. இது அவரது 48வது படமாகும்.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், சாதாரண மக்களுக்கும் மருத்துவ வசதி எளிதில் கிடைக்கப் பாடுபடும் ஒரு மருத்துவரின் வாழ்க்கையை பேசும் கதையில் உருவாகி வருகிறது. சமூக அக்கறை கொண்ட கதைக்களம் மற்றும் சுவாரசியமான கதாபாத்திரம் என்பதால், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் 'சூர்யா X ஹோம்பாலே' என்ற பெயரில் விளம்பரம் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !