30 வருடங்களுக்குப் பிறகு சுகாசினி படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு
சமீபகாலமாக மிகப்பெரிய நட்சத்திரங்களின் அல்லது மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஆச்சர்யமாக கன்னடத்தில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படமான 'அமிர்தவர்ஷினி' என்கிற படத்தின் இரண்டாம் பாகம் 'அமிர்தவர்ஷினி 2' என்கிற பெயரில் அதிகாரப்பூர்வமாகத் தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்த், மற்றும் நடிகை சுகாசினி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்த இரண்டாம் பாகத்திலும் அவர்கள் இருவருமே மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இவர்கள் தவிர சில புதிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.. முதல் பாகத்தை இயக்கிய தினேஷ் பாபு தான் இதையும் இயக்குகிறார்.
முதல் பாகத்தின் இறுதிக்காட்சி எங்கு முடிவடைந்ததோ அங்கிருந்தே படத்தின் கதையைத் தொடர இருப்பதாகவும் இயக்குனர் கூறியுள்ளார். இதன் முதல் பாகத்திற்கு மறைந்த இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அவரது இசையை ஈடு செய்யும் விதமாக இசைக் குழுவைத் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறதாம்.