உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓம் படத்திற்காக தொடர்ந்து இரண்டரை நாட்கள் கதை கேட்ட மம்முட்டி

ஓம் படத்திற்காக தொடர்ந்து இரண்டரை நாட்கள் கதை கேட்ட மம்முட்டி

நடிகர் மம்முட்டி 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தமிழில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'அமரன்' படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் என்பதாலும், மம்முட்டி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிப்பதாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மம்முட்டியை அவ்வளவு எளிதில் தமிழில் நடிக்க கதை சொல்லி ஒப்புக்கொள்ள வைப்பது சிரமம் என்று பல இயக்குனர்கள் இதற்கு முன்பு கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் மம்முட்டியிடம் கதை சொல்லி அவரை சம்மதிக்க வைத்ததே ஒரு சுவாரசியமான சினிமா போல இருந்தது என்று கூறியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு இயக்குனர் ராஜ்குமாரை கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்திருக்கிறார் மம்முட்டி. இரவு நேரங்களைத் தவிர்த்து மீதமுள்ள இரண்டரை நாட்கள் முழுவதையும் திரைக்கதையை முழுமையாகக் கேட்பதற்காக மட்டுமே ஒதுக்கினாராம் மம்முட்டி.. அதிலும் முதல் நாள் முழுவதும் முதல் பாதியையும், இரண்டாவது நாள் முழுவதும் இரண்டாம் பாதியையும் கேட்ட மம்முட்டி, மூன்றாம் நாளில் தனது சொந்தக் காட்சிகள் குறித்து மட்டுமே விவாதித்தாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !