உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிறார் நீதிச் சட்டத்தில் வயது வரம்பை 12 ஆக குறைக்க வேண்டும் : நடிகை அம்பிகா வலியுறுத்தல்

சிறார் நீதிச் சட்டத்தில் வயது வரம்பை 12 ஆக குறைக்க வேண்டும் : நடிகை அம்பிகா வலியுறுத்தல்

கடந்த மாதம் கேரளாவில் உள்ள சோரநல்லூர் என்கிற பகுதியில் சாதாரண கடை வியாபாரம் செய்து வரும் ஜெயபால கிருஷ்ணன் என்பவர் மீது சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகி அவர் இறந்து போனார். அவரது மகள் பத்ர கீர்த்தி தனது தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை அம்பிகா அவர்களது வீட்டிற்கே நேரில் சென்று தனது ஆறுதல்களைக் கூறியுள்ளார்.

மேலும் இந்தச் சந்திப்பின்போது அவர் கூறுகையில், தற்போதைய சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் உள்ள வயது வரம்பை 12 ஆகக் குறைக்க வேண்டும். காரணம் இன்றைய நவீன காலத்தில் சிறுவர்களின் அறிவும் சிந்தனையும் முதிர்ந்தவர்களைப் போலவே மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.. சிறுவர்கள் என்ற பெயரையும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் பயன்படுத்திக் கொண்டும் கடுமையான குற்றங்களைச் செய்பவர்கள் தப்பி வரும் சூழ்நிலை மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !