உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யஷ் குழந்தைகள் பெயர் பின்னால் உள்ள காரணம்

யஷ் குழந்தைகள் பெயர் பின்னால் உள்ள காரணம்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்த பிரமாண்ட படைப்பான 'ராமாயணா' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்டத் திரையிடல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. இதில் யஷ் மற்றும் அவர் மனைவி ராதிகா பண்டிட் பார்த்தனர். இந்த தம்பதியின் குழந்தைகளான 8 வயதாகும் ஐரா மற்றும் யதர்வ் ஆகியோருக்கு 'ராமாயணா' திரைப்படம் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளதாம்

இப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போகஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. அதோடு, ராவணன் கதாபாத்திரத்திலும் யஷ் நடித்துள்ளார். அதனால் படத்தை குடும்பத்தோடு பார்த்து ரசித்துள்ளார்.

ஐரா மற்றும் யதர்வ் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்தும் விளக்கி உள்ளனர். ஐரா என்ற பெயர், மகாலட்சுமியின் மற்றொரு பெயரான ஐராவதி என்றும், யதர்வ் என்ற பெயருக்கு 'முழுமையானவன்' என்றும் பொருள். மேலும், யஷ், ராதிகா மற்றும் ஐரா ஆகிய மூவரின் பெயர்களை இணைத்தே யதர்வ் என்ற பெயரைத் தேர்வு செய்ததாகவும் யஷ் மற்றும் ராதிகா தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 5 ஆம் தேதி 'ராமாயணா' திரைப்படம் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !