தெலுங்கில் 100 கோடி வசூலை நோக்கி 'ஜெயிலர் 2'
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அக்டோபர் 15ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர் 2'. இப்படம் ஒரு வாரத்தில் 549 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதற்குப் பின் வேறு எந்த அறிவிப்பும் வரவில்லை.
முதல் வாரம் முடிந்த பின்பு வெளியான அறிவிப்பு போல, இரண்டாவது வாரம் முடிந்த பின்பு அடுத்த வசூல் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இப்படம் 750 கோடி வசூலைக் கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் 500 கோடியும், வெளிநாடுகளில் 250 கோடி வசூலித்திருக்கலாம் என்பது தகவல். தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் டப்பிங் ஆகி வெளியானது. தெலுங்கில் 95 கோடி வசூலை நெருங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், அங்கு 100 கோடி வசூலைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா போலவே மற்ற தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகாவில் 80 கோடி வசூலையும், கேரளாவில் 70 கோடி வசூலையும் கடந்துள்ளது என்கிறார்கள். வட இந்தியாவில் 50 கோடி வசூலையும் கடந்துள்ளதாகத் தகவல். அங்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் இந்நேரம் 100 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழிகத்தில் மட்டுமே இப்படம் 200 கோடியை நெருங்கி வருவதாகவும், அதைக் கடப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.