நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் : இயக்கப் போவது யார் ?
தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். அமெரிக்கா சென்று திரைப்படம் சார்ந்த படிப்புப் படித்துவிட்டு வந்தவர். அவர் இயக்குனராக அறிமுகமான 'சிக்மா' படம் இந்த மாதம் அக்டோபர் 2ம் தேதி வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் நாயகனாக அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அவரை நடிகராக அறிமுகப்படுத்த சில நிறுவனங்கள் முன்வந்தன. சில இயக்குனர்களும் அவரை சந்தித்து கதை சொன்னார்களாம். ஆனால், எந்த தயாரிப்பு நிறுவனம், யார் இயக்குனர் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள்.
விஜய் நடித்த 'தெறி, மெர்சல், பிகில்' படங்களை இயக்கிய அட்லீயும் ஜேசனை நாயகனாக அறிமுகப்படுத்த அவரது விருப்பத்தைத் தெரிவித்துள்ளாராம். பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படத்தை இயக்கிய கீர்த்திஸ்வரன், ஜேசனிடம் கதை சொல்லி அதற்கு சம்மதம் வாங்கிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
அட்லீ தயாரிக்க, கீர்த்திஸ்வரன் இயக்க, ஜேசன் சஞ்சய் நாயகனாக அறிமுகமாக என சீக்கிரத்தில் அறிவிப்பு வரலாம் என்பது தற்போதைய தகவல். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இன்னும் இப்படியான செய்திகள் வந்து கொண்டிருக்கும்.