உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாலிபக்கவிஞர் வாலியின் 95வது பிறந்தநாள்: இந்த பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறீர்களா?

வாலிபக்கவிஞர் வாலியின் 95வது பிறந்தநாள்: இந்த பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறீர்களா?


இன்று வாலிபக்கவிஞர் வாலியின் 95வது பிறந்தநாள். காதல், சோகம், அன்பு, வீரம், ஆன்மிகம் என பல தலைப்புகளில் அவர் 15 ஆயிரம் பாடல்கள் எழுதியிருந்தாலும் இன்றும் சில பாடல்கள் காலத்தை கடந்து நிற்கின்றன. அதில் சில பாடல்கள்:

1) தொட்டால் பூ மலரும் / எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில், எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த 'படகோட்டி' படத்தில் இடம் பெற்ற பாடல்.

2) காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் / எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி நடித்த 'கலங்கரை விளக்கம்' படத்தில் வந்த பாடல்.

3) நான் ஆணையிட்டால் / எம்ஜிஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை' இடம் பெற்ற பாடல். பிற்காலத்தில் எம்ஜிஆரின் அரசியல் வெற்றிக்கும் பயன்பட்டது.

4) மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள் / எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இரு மலர்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்.

5) மதுரையில் பறந்த மீன்கொடியை / கே. பாலச்சந்தர் இயக்கத்தில் பூவா தலையா (1969) படத்தில் இடம்பெற்ற பாடல் இது.

6) முன்பே வா என் அன்பே வா / ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூர்யா நடித்த 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் இடம் பெற்ற காதல் பாடல்.

7) கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது / கமலின் 'தசவதாரம்' படத்தில் இடம் பெற்ற பக்தி பாடல்

8) முக்காலா முக்காபுலா / 'காதலன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வாலி எழுதிய இளமையும், ஆங்கிலமும் கலந்த பாடல்.

9) கப்பலேறி போயாச்சு / ஷங்கர் இயக்கிய 'இந்தியன்' படத்தில் இடம் பெற்ற சுதந்திர தாகம் நிறைந்த எழுச்சி பாடல்.

10) முஸ்தபா முஸ்தபா / இன்றைக்கும் நட்பு என்றால் இந்த பாடலைதான் பாடுகிறார்கள். 'காதல்தேசம்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வாலி எழுதிய பாடல்.

தாயை புகழ்ந்த வாலி

இந்த பாடல்கள் தவிர தாய் அன்பை உணர்த்த வாலி எழுதிய 'தாயில்லாமல் நானில்லை', 'அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே', 'நானாக நான் இல்லை தாயே' மற்றும் 'ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்' பாடல்களும் பிரபலம். இந்த பாடல்கள் தவிர, 'ஊர்வசி ஊர்வசி, மடை திறந்து, சுந்தரி கண்ணால், காசுமேல காசு வந்து, வத்திக்குச்சி பத்திகாதுடா, ரோஜா ரோஜா' ஆகிய பாடல்களும் பிரபலம்.

ஆன்மிக பாடல்களில் 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' பாடல் இன்றும் முருகன் கோயில்களில் ஒலிக்கிறது. 'அந்த நாள் ஞாபகம், டாலாக்கு டோல் டப்பி மா, காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா…. மன்னவனே அழலாமா, அத்தை அடி மெத்தையடி' பாடலும் அவர் வரிகளால் இன்றும் ஒலித்துகொண்டே இருக்கிறது.

இந்த பாடல்களை மறக்க முடியுமா?

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்,
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்கொடுத்ததெல்லாம் கொடுத்தான்.
அவன் யாருக்காகக் கொடுத்தான்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி,
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா,
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
- இந்த பாடல் இன்றும் பலர் மனதில் நிற்கிறது. தவிர, 'அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே' பாடலும் பிரபலம்.

இளையராஜா, வாலி கூட்டணியில் ஹிட் பாடல்கள்

இளையராஜா, வாலி கூட்டணிக்கு எப்போதுமே தனி இடம். அந்த வகையில் ''தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான், ஓஹ் பார்ட்டி நல்ல பார்ட்டி தான், நிலவே முகம் கட்டு, சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே, குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு, நன்றி சொல்வே உனக்கு வார்த்தை இல்லை எனக்கு, வலையோசை கல கல கலவென கவிதைகள், கல்யாண மலை கொண்டாடும் பெண்ணே, பூவே செம்பூவே, புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா, தென்மதுரை வைகை நதி, பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம், ராசத்தி உன்னை காணாத நெஞ்சு, மலையோரம் வீசம் காற்று, மலையாள கரையூரம் கவிபாடும், நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்காது, ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ, மந்திரம் வந்த தென்றலுக்கு, அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி, ஜனனி ஜனனி ஜெகம் நீ அகம் நீ, நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான், ஓ பிரியா பிரியா, அழகு மயில் ஆட அபிநயங்கள் கூட,
தூளியிலே ஆட வந்த, காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி, ஒரு நாயகன் உதயமாகிறான், தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு'' உள்ளிட்ட பாடல்களும் இன்றும் எங்கேயாவது ஓரிடத்தில் ஒலித்துகொண்டே இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !