உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எழுத்தாளர் சங்க தேர்தல்: ராஜ்பிரபு தலைவராக தேர்வு

எழுத்தாளர் சங்க தேர்தல்: ராஜ்பிரபு தலைவராக தேர்வு


தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல் வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தின் தலைவராக ராஜ் பிரபு ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வாக்கு பதிவின் முடிவுகளின் படி, பொதுச்செயலாளராக பெருமாள் நெர், பொருளாளராக மருது சங்கர், துணைத் தலைவர்களாக கவிதா பாரதி, தாமஸ் கென்னடி, இணைச்செயலாளர்களாகஜா.தீபா, குரு சம்பத்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

முத்துச்செல்வன், ஜோதி, அருணாச்சலம், அன்புச் செழியன், பொன் இளங்கோ, சபரிநாதன், குமரேசன், கே.வடிவேலு ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !