14 ஆண்டு காதல் : ஸ்பெயினில் கோலாகலமாக நடந்த அர்ஜுன் 2வது மகள் திருமணம்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அர்ஜுன். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். படங்களும் இயக்கி, தயாரித்துள்ளார். இவருக்கு இரு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா. நடிகையான இவர் நடிகர் தம்பி ராமைய்யாவின் மகனும், நடிகருமான உமாபதியை 2024ல் திருமணம் செய்தார்.
2வது மகளான அஞ்சனா, பேஷன் டிசைனிங் முடித்துவிட்டு பெண்களுக்கான ஹேண்ட் பேக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இத்தாலி நாட்டை சேர்ந்த இஷாய் என்பவரை கடந்த 14 ஆண்டுகளாக காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இப்போது ஸ்பெயின் நாட்டில் திருமணம் நடந்துள்ளது. அக்., 19ல் இவர்களது திருமணம் நடந்துள்ளது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் வெகு விமரிசையாக கோலாகலமாய் நடந்துள்ளது. இப்போது அந்த போட்டோக்களை அர்ஜுன், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
‛‛அழகிய தருணம். என் அஞ்சு அம்மா(மகள் அஞ்சனா). 14 ஆண்டு காதல்'' என குறிப்பிட்டுள்ளார் நடிகர் அர்ஜுன்.