உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் வெப் சீரியஸ் வெளியான அன்றே உயிரிழந்த இயக்குனர் ; கேரளாவில் சோகம்

முதல் வெப் சீரியஸ் வெளியான அன்றே உயிரிழந்த இயக்குனர் ; கேரளாவில் சோகம்


மலையாள திரை உலகில் இளம் இயக்குனர் பெல்ராஜ் கல்லரக்கல் என்பவர் இயக்கத்தில் ‛கப்பி ஸ்குவாட்' என்கிற ஒரு புதிய வெப் சீரிஸ் கடந்த வெள்ளியன்று ஜியோ ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் ஒளிபரப்பானது. இந்த நிலையில் அன்று இரவே எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இயக்குனர் பெல்ராஜ் கல்லரக்கல் இறந்து கிடந்தார். முதற்கட்ட தகவல்களின்படி மாரடைப்பு காரணமாக அவர் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவரது உடல் சன்ரைஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ‛நிழல், மதுரம், தாகினி' போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் தான் இயக்குனர் பெல்ராஜ் கல்லரக்கல். கோட்டயம் மாவட்டத்தின் மணிமலையை சேர்ந்த இவருக்கு ஆதிரா என்கிற மனைவி இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் தான் இவர்கள் திருமணம் நடைபெற்றது என்பது இன்னொரு துயரமான செய்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !