உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சொந்த ஊர் கொண்டுசெல்லப்படும் தேவா உடல்; வழிநெடுக ரசிகர்கள் அஞ்சலி

சொந்த ஊர் கொண்டுசெல்லப்படும் தேவா உடல்; வழிநெடுக ரசிகர்கள் அஞ்சலி


தமிழ் சினிமாவில் ‛தேனிசை தென்றல்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவா நேற்று (அக்.,17) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 75. அவரது உடல் சென்னை, திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இன்று, அங்கிருந்து தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. நடிகரும், தேவாவின் சகோதரர் மகனுமான ஜெய் அவரது உடலை சுமந்து, இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றினார். அங்கிருந்து ஊர்வலமாக சென்று, ஆற்காடு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள அவரது பண்ணை தோட்டத்தில் 7 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட முழு தேக்கால் ஆன சவப்பெட்டியில் வைத்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளார். தேவாவின் உடலுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !