உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்டிஆர் வாழ்ந்த வீட்டை அரசுக்கு கொடுக்கிறார் பாலய்யா

என்டிஆர் வாழ்ந்த வீட்டை அரசுக்கு கொடுக்கிறார் பாலய்யா

பழம்பெரும் நடிகர் மற்றும் ஆந்திர முதல்வராக இருந்தவர் என்.டி.ராமரா. இவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணா, தெலுங்கின் முன்னணி நடிகராக உள்ளார். 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அவர் நடித்த சமீபத்திய படங்களான அகண்டா, அகண்டா 2, டாக்கு மஹாராஜ், பகவந்த் கேசரி, வீர சிம்ஹா ரெட்டி, ஆகிய படங்கள் வெற்றிபெற்று, 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தன.

பாலகிருஷ்ணா, தனது குடும்பத்துடன் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள தங்களது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். இது என்.டி.ராமராவ் வாழ்ந்த வீடு. தற்போது அந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அதற்காக வீட்டின் சாலையோர பகுதியை தருமாறு அரசு அவரிடம் கேட்டது. இதை ஏற்ற என்.டி.பாலகிருஷ்ணா முழு வீட்டையும் அரசிடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளார். சாலை விரிவாக்க பணிகள் போக மீதுமுள்ள வீட்டின் பகுதியை என்டிஆரின் நினைவகமாக பயன்படுத்த அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் 100 கோடி செலவில் தான் கட்டிவரும் மாளிகையில் என்.டி.பாலகிருஷ்ணா குடியேற இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !