ஹிந்தி ‛திரிஷ்யம் 3' பார்த்துவிட்டு அஜய் தேவ்கனுக்கு மோகன்லால் பாராட்டு
மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தின் அடுத்தடுத்த இரண்டு பாகங்கள் உருவான பின்னர் அவை அப்படியே ஹிந்தியிலும் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டன. இரண்டிலும் எது நன்றாக இருக்கிறது என்கிற ஒப்பீடு கூட அவ்வப்போது ரசிகர்களிடம் எழுந்தது. இந்த நிலையில் மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிவிட்டது.
ஆனால் ஹிந்தியில் திரிஷ்யம் 3 என்கிற டைட்டிலை மீட்டும் வைத்துக் கொண்டு புதிய கதையை வைத்து இதை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அபிஷேக் பதக். ரசிகர்களும் இதன் வித்தியாசமான திரைக்கதைக்காகவும் முக்கியமாக அருமையான கிளைமாக்ஸ்காகவும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் மோகன்லால் திரிஷ்யம் 3 படத்தை பார்த்து வியந்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‛‛நான் திரிஷ்யம் 3 திரைப்படத்தை பார்த்தேன் பலரால் விரும்பப்பட்ட இந்த நீண்ட பயணத்திற்கு மிகவும் பொருத்தமான மற்றும் சிறப்பான ஒரு முடிவை தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ளார்கள். இதனால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் அபிஷேக் பதக் தயாரிப்பாளர் குமார் அமம்ஹ்கா மற்றும் அஜய் தேவகன் உள்ளிட்ட படக்ழுவிவினர் அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் மோகன்லால் தெரிவித்துள்ளார்.