உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கருப்பு' பாடலை ரசித்த விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா

'கருப்பு' பாடலை ரசித்த விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா


விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ரணபாலி' தெலுங்குப் படம் அக்டோபர் 16ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பின்னணிப் பாடகர் மகாலிங்கம் கலந்து கொண்டார். இப்படத்தின் டிரைலர் அவர் பாடும் பாடலுடன் தான் ஆரம்பமாகிறது. படத்திலும் நடித்திருக்கிறாரா என்பது படம் வந்த பிறகுதான் தெரியும்.

நேற்றைய நிகழ்ச்சியில் 'கருப்பு' படத்தில் தான் பாடிய 'கருப்பா கூட வா' பாடலின் சில வரிகளை மகாலிங்கம் பாடினார். அவர் பாடியதைக் கேட்ட விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா இருவரும் ரசித்து கை தட்டி பாராட்டினர். ரசிகர்களும் வெகுவாக ரசித்து அதை மொபைலில் படம் பிடித்தனர். 'கருப்பு' படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றிருந்தது. அந்த அளவிலான உணர்வு மிக்க பாடலாக அது அமைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !