உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினிகாந்தை பார்த்து பிரமித்த ஆக்ஷ்ன் நடிகை

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினிகாந்தை பார்த்து பிரமித்த ஆக்ஷ்ன் நடிகை

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் புதிய நட்சத்திரங்களாக எதிர்பாராத டுவிஸ்ட் ஆக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கிளைமாக்ஸில் இணைந்து நடித்துள்ளார். இதில் ரஜினிகாந்த்திற்கு உதவும் கேங்ஸ்டர் ஆக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார். அவர் தன்னிடம் உள்ள அதிரடியான ஆக் ஷன் பெண்களைக் கொண்ட படை மூலம் ரஜினியை ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றுவார்.

இந்த அதிரடி பெண்களில் ஒருவராக நடித்தவர் மும்பையைச் சேர்ந்த நடிகையான அபக்ஸா போர்வால். இவர் ஏற்கனவே ஓடிடி படங்கள் மூலம் அறியப்பட்டவர். இந்த படப்பிடிப்பின் போது ரஜினிகாந்தை பார்த்த பிரமித்துப்போன அவர், “அவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரம் தனது சுற்றுபுறத்தில் உள்ள அனைவரிடமும் இவ்வளவு பணிவாகவும் எளிமையாகவும் கனிவாகவும் நடந்து கொள்வதை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அவருடைய எளிமையும் நேர்மறையான ஆளுமையும் என்னை வியக்க வைத்தது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !