உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எப்படி இறந்தார் தேவா : சிகிச்சை அளித்த டாக்டர்கள் பேட்டி

எப்படி இறந்தார் தேவா : சிகிச்சை அளித்த டாக்டர்கள் பேட்டி

இசையமைப்பாளர் தேவா சென்னையில் காலமானார். சென்னை, திநகரில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை அவரது உடலில் அசவுகரியம் ஏற்பட நெஞ்சவலிப்பதாக வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி உள்ளார். உடனடியாக அவர் அருகில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.

தேவாவுக்கு சிகிச்சை அளித்த சூர்யா மருத்துவமனையின் சிவதர்ஷினி, வெற்றி உள்ளிட்ட மருத்துவர்கள் கூறியதாவது: ‛‛தேவாவுக்கு ஏற்கனவே இதய பிரச்னை இருந்துள்ளது. காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்தனர். வரும் போதே அவருக்கு நாடித்துடிப்பு இல்லை. தேவாவின் முக்கிய ரத்தக் குழாயில் பெரிய அடைப்பு இருந்தது. சி.பி.ஆர்., உள்ளிட்ட அனைத்து வகையான நவீன உயர்தர சிகிச்சை தரப்பட்டது. 1.30 மணி நேரம் அவரை மீட்க போராடினோம். துரதிர்ஷ்டவசமாக முடியாமல் போனது'' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !