உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பூஜா ஹெக்டே 36வது பிறந்தநாள்: 'ஸ்ரீ ஸ்ரீ' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டது!

பூஜா ஹெக்டே 36வது பிறந்தநாள்: 'ஸ்ரீ ஸ்ரீ' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டது!


நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சிறப்பான நாளில் பூஜா ஹெக்டேவை வாழ்த்தும் வகையில், 'ஸ்ரீ ஸ்ரீ' என்ற தெலுங்கு படக்குழு பிறந்தநாள் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பிறந்தநாள் போஸ்டரில் அவர் மிகவும் இயல்பாகவும் எளிமையாகவும் தோன்றுவது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. உங்கள் அழகாலும் நேர்த்தியாலும் இந்த கதையை இன்னும் அழகாக்கினீர்கள் என்று படக்குழு அவரைப் பாராட்டி ஒரு சிறப்புச் செய்தியையும் பகிர்ந்துள்ளது.

இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ரவி நெலகுடிதி இயக்கும் இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் பட நிறுவனத்தின் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்து வருகிறார். முன்னதாக டிசம்பர் 4ம் தேதி அன்று படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது படம் புதிய வெளியீட்டுத் தேதியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழில், 'ஜனநாயகன்' படத்தை அடுத்து தற்போது 'காஞ்சனா-4' படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !