உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 : 1.1 மில்லியன் கடந்த அமெரிக்க பிரிமியர் முன்பதிவு

ஜெயிலர் 2 : 1.1 மில்லியன் கடந்த அமெரிக்க பிரிமியர் முன்பதிவு

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் 'ஜெயிலர் 2'. இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாக திரையிடப்பட உள்ளன. அமெரிக்க நேரப்படி 14ம் தேதி மாலை காட்சியாக பிரிமியர் காட்சிகள் நடைபெற உள்ளன.

அதற்கான முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வந்தது. அதன் வசூல் மட்டும் தற்போது 1.1 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்துள்ளதாக அமெரிக்க வினியோகஸ்தர் அறிவித்துள்ளார்.

ரஜினி படங்கள் என்றாலே அமெரிக்காவில் நல்ல வசூலைக் குவிக்கும். அங்கு தமிழ்ப் படங்களுக்கான மார்க்கெட்டை தனது 'சிவாஜி படம் மூலம் ஆரம்பித்து வைத்தவர் ரஜினி தான்.

'கூலி' படம் ரசிகர்களை அதிகமாக திருப்திப்படுத்தவில்லை. அப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்து வரும் படம் என்பதாலும் 'ஜெயிலர்' படத்தின் இரண்டம் பாகம் என்பதாலும் இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ரஜினியின் முந்தைய படங்களின் வசூலை இந்த 'ஜெயிலர் 2' முறியடிக்குமா என்பதைப் பார்க்கவும் திரையுலகினரும் ஆர்வமாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !