உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரணபாலி' எனக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் என்கிறார் விஜய் தேவரகொண்டா!

'ரணபாலி' எனக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் என்கிறார் விஜய் தேவரகொண்டா!


விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா நடித்துள்ள 'ரணபாலி' படம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா ஹைதராபாத்தில் உள்ள சில்பகலா வேதிகாவில் நடைபெற்றது.

அந்த விழாவில் விஜய் தேவரகொண்டா பேசுகையில், ''இந்த விழாவில் கலந்து கொண்ட எனது இயக்குநர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகைக்காலக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. ரணபாலி தெலுங்குத் திரையுலகைப் பெருமைப்படுத்தும். ராகுல் ஒரு பிரமாண்டமான வரலாற்று பின்னணி கொண்ட மாஸ் ஆக்ஷன் படத்தை உருவாக்க விரும்பினார். மேலும் ரணபாலி கதையை எழுதுவதற்கு முன் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அப்போதுதான் வரலாற்றில் அறியப்படாத ஒரு பக்கத்தைப் பற்றி அவர் தெரிந்து கொண்டார்'' என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ''ஒரு சாதாரண வரலாற்றுப் படத்தை உருவாக்கியிருந்தால் இந்த அளவுக்குத் தாக்கம் ஏற்பட்டிருக்காது. ஒரு பிரமாண்ட தளத்தில் உருவாக்க நினைத்த தனது படத்திற்காக ராகுல் ஒரு வலுவான கருப்பொருளைக் கண்டறிந்தார். 'டாக்ஸிவாலா' ரிலீஸின் போது, 'நோட்டா' படத்தின் தோல்வியால் நான் விமர்சனங்களைச் சந்தித்தேன். மக்கள் எனது தோல்வியை ரசிக்கிறார்கள் என்பதை அறிந்து, நான் மீண்டும் வலுவாகத் திரும்பி வருவேன் என்று எழுதி ஒரு கடிதம் வெளியிட்டேன்.

நான் மீண்டும் வருவேன் என்று சொன்னால் நிச்சயம் வருவேன் என்பதை என்னைக் குறை கூறியவர்களுக்கு நினைவூட்டினேன். ராகுல் எனக்கு மீண்டும் அப்படிப்பட்ட ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அனைத்தும் சரியாக அமைந்தால், அனந்தபூரில் மீண்டும் எனது எதிர்ப்பாளர்களுக்கு அதை நினைவூட்டுவேன். நம் மீதான நம்பிக்கையும், உழைப்புக்கான அர்ப்பணிப்பும் மட்டுமே நம் கைகளில் உள்ளது.

எனது தயாரிப்பாளர்களான நவீன் காரு மற்றும் ரவி காருவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு சினிமாவின் எல்லையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் மைத்ரீ நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனது திரைப் பயணத்தில் எனக்குப் பல அற்புதமான பாடல்கள் கிடைத்துள்ளன. ரணபாலி படத்தில், 'எந்தய்யா சாமி' பாடல் மூலம் அஜய்-அதுல் இணை அப்படிப்பட்ட ஒரு பாடலை எனக்கு வழங்கியுள்ளனர். ஒரு நடிகையாக ராஷ்மிகாவின் வளர்ச்சியைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவது சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்வைத் தருகிறது'' என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !