உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெகபதி பாபுவின் 'டாக் ஷோ' நிகழ்ச்சியில் சாய் பல்லவி!

ஜெகபதி பாபுவின் 'டாக் ஷோ' நிகழ்ச்சியில் சாய் பல்லவி!


வருகிற நவம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள 'ராமாயணா ரைஸ் ஆப் எ லெஜண்ட்' மற்றும் 'ஓம்' ஆகிய இரண்டு படங்களின் வெளியீடுக்காகக் காத்திருக்கிறார் சாய் பல்லவி. இதற்கிடையில், ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும், 'ஜெயமு நிச்சயமு ரா' பிரபலங்கள் கலந்து கொள்ளும் டாக் ஷோவின் 2வது சீசனில் அவர் முதல் விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி சாய் பல்லவியின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த தெலுங்கு நிகழ்ச்சி ஜீ 5 ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. மேலும், சாய் பல்லவி கலந்து கொண்ட எபிசோட்டின் புரொமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 16, 2026 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று அந்தத் தளம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறன்றும் ஒளிபரப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !