உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனின் புதிய தம்பி சாய் அப்யங்கர்

சிவகார்த்திகேயனின் புதிய தம்பி சாய் அப்யங்கர்

தமிழ் சினிமாவில் புதிய 'மியூசிக் சென்சேஷன்' என ஜென் ஸி-யினரால் அழைக்கப்படுபவர் சாய் அப்யங்கர். அவர் இசையில் இதுவரையில் வெளிவந்த 'டியூட், கருப்பு' ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'பத்தா' சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.

தற்போது தமிழில் தனுஷ் நடிக்கும் 'ஓம்', ராகவா லாரன்ஸ் நடிக்கம் 'பென்ஸ்', கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்' ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'ராக்கா' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க, 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

அறிவிப்பு வந்த பின்பு, சாய் அப்யங்கர், “எஸ்கே 27 படத்தில், சிவகார்த்திகேயன் அண்ணாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன். அண்ணா, உங்கள் படங்களின் முதல் நாள் முதல் காட்சியை நான் ஒரு முறை கூட தவறவிட்டதில்லை. இப்போது இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இது தியேட்டர்களில் மிகப் பெரிய கொண்டாட்டமாக அமையப் போகிறது, ஆரம்பிக்கலாம்,” என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு இன்று பதிலளித்த சிவகார்த்திகேயன், “தம்பி, உங்களை இதில் இணைத்துக் கொள்வதில் மிகுந்த உற்சாகம். உங்கள் இசையுடன் முதல் நாள் முதல் காட்சி அமர்க்களமாக இருக்கப் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய அண்ணா, தம்பி பாசம் அவர்களது பதிவில் பல கமெண்ட்டுகளைப் பதிவிட வைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்த 'மதராஸி' படத்தில் இடம் பெற்ற 'சலம்பல' பாடல் தான் பின்னணிப் பாடகராக சாய் அப்யங்கர் பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2026-10-14 11:49:11

இந்த சாய் oru standard dialogue வைத்து இருக்கான். எவன் படம் மியூசிக் போட்டாலும் அந்த ஹீரோ ஒட பரம ரசிகன் opening show கட்டாயம் பார்ப்பேன் என்று.. படம் பாரு ok தான் பட் நல்ல மியூசிக் கொடு. உனக்கு அருமையாக பாட தெரிந்த அளவு composing skills எல்லாம் இல்லை.. பெரிய ஹீரோ பெரிய படங்கள் கையில் இருக்கு. Unnoda பங்கு நிறைய தேவை. நல்லா டெவலப் பண்ணு