உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் படம் தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா: ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இயக்குகிறார்

மீண்டும் படம் தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா: ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இயக்குகிறார்


ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் வலது கரமாக விளங்கியவர் ஆர்.டி.ராஜா. அவர் படங்கள் வெற்றி அடைய வியூகம் வகுத்தார். ஆரம்பகால சிவகார்த்திகேயன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ, வேலைக்காரன்,
சீமராஜா, அயலான்' படங்களை தயாரித்தார். இதில் பெரிய இழப்பை சந்தித்தார். சில ஆண்டுகள் கடன் பிரச்னை சந்தித்தார். அவருக்கு யாரும் உதவவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் பிரச்னைகளில் இருந்து மீண்டு, மந்திரா ஸ்டூடியோஸ் என்ற புது நிறுவனம் தொடங்கி உள்ளார். இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''புதிய சிந்தனைகளுடன் 'மந்திரா ஸ்டுடியோஸ்' உருவாகிறது. தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா தொடங்கும் இந்நிறுவனத்தின் முதல் முயற்சியாக, இயக்குனர் டி.முத்துராஜ் இயக்கும் ஹைபர் ரியாலிஸ்டிக் டிஜிட்டல் ஹைபிரிட் (Hyper-Realistic Digital Hybrid) திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்தும் படங்கள் தயாரிக்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது. ஆர்ட் டைரக்டர் ஆக பல படங்களில் பணியாற்றியவர் முத்துராஜ். இவர் இயக்குனர் ஆகிறார். அந்த படம் குறித்த மற்ற தகவல் விரைவில் அறிவிக்கப்படஉள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !